ஐ.பி.எல். ஆட்டங்களின் எண்ணிக்கையை 94 ஆக உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக ஐபிஎல் சேர்மன் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ஐ.பி.எல்.-ல் ஒவ்வொரு அணியும் முழுமையாக உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மோதும் வகையில் போட்டி அட்டவணையை விரிவுபடுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகக் கூறியுள்ளார்.
இத்தகைய பாணியில் ஆடும் போது, மொத்தம் 94 ஆட்டங்கள் நடத்த வேண்டி இருக்கும் என்றும், அடுத்த டி.வி. ஒளிபரப்பு உரிமம் வழங்கும் காலக்கட்டமான 2028-ல் இருந்து அதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.