திருச்சி, சங்கிலியாண்டபுரம் பகுதியில் 14 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த நடிகர் சிவாஜி கணேசனின் வெண்கலச் சிலையை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
கடந்த 2011-ம் ஆண்டு அவரது ரசிகர்களால், அப்பகுதியில் 9 அடி உயரமுள்ள வெண்கலச் சிலை வைக்கப்பட்டது.
அந்த சிலையைத் திறந்து வைக்கச் சிவாஜி கணேசனின் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதாக அந்த சிலையை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
சிவாஜி கணேசனின் சிலை மாற்று இடத்தில் வைக்கப்பட்டுத் திறப்பு விழா நடத்தப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















