தென்காசி அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த காரின் டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் மாற்றுத்திறனாளி உட்பட இருவர் பலத்த காயமடைந்தனர்.
தென்காசியைச் சேர்ந்த அரவிந்தன் என்பவர் பாவூர்சத்திரம் வழியாக நெல்லை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது திடீரென கார் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த மாற்றுத்திறனாளியின் இருசக்கர வாகனம் மீது மோதி, அங்கிருந்த பனை மரத்தின் மீது இடித்து நின்றது.
இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட மாற்றுத்திறனாளி முனியப்பன் பலத்த காயம் அடைந்தார்.
காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய அரவிந்தனுக்கும் படுகாயம் ஏற்பட்டது. விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.