ஹீரோ நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட HF 100 பைக்கை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
OBD2B அப்டேட்டைத் தவிர புதிய பைக்கில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
BS6 இரண்டாம் கட்டத்தில் ஒரு பகுதியாக இந்த அப்டேட் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த பைக்கில் 8.02 hp பவர் மற்றும் 8.05 Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய, 97.2 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அப்டேட் செய்யப்பட்ட இந்த பைக்கானது 57 ஆயிரத்து 918 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கிறது. இது முந்தைய பைக்கை விட ஆயிரத்து 100 ரூபாய் கூடுதலாகும்.