ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 71 ஆம் பீடாதிபதியாக, பொறுப்பேற்றுள்ள ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 71 ஆம் பீடாதிபதியாக, ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று பொறுப்பேற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவர்களுக்கு நல்வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
நமது நாட்டின் ஆன்மீக மேம்பாட்டிலும், சமூக மேம்பாட்டிலும் பெரும்பங்கு வகிக்கும், தொன்மையும் பெருமையும் வாய்ந்த காஞ்சி சங்கர மடத்தின் மேலான பணிகளை, மேலும் பல நூற்றாண்டுகள் கொண்டு செல்ல, இளைய மடாதிபதி ஶ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் நிச்சயம் பெரும்பங்கு வகிப்பார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.