தமிழகத்தில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டவர்களைக் கண்டறிந்து வெறியேற்றுவது குறித்து தமிழக உள்துறை செயலாளர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக நாடு முழுவதும் விசா காலம் முடிந்த பின்பும் சட்ட விரோதமாகத் தங்கி உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அனைத்து மாநில அரசுகளும் இதுதொடர்பான நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதன்படி தமிழகத்தில் சட்ட விரோதமாகத் தங்கி இருக்கும் வெளி நாட்டவர்களை வெளியேற்றுவது குறித்து உள்துறை செயலாளர் தீரஜ் குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.