டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மீது ஊழல் தடுப்புப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது 12 ஆயிரத்து 748 வகுப்பறைகள் கட்டுவதில் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்கவில்லை என்றும், உரிய நடைமுறையைப் பின்பற்றாததால் செலவு அதிகரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், வகுப்பறைகள் கட்டியதில் ஊழல் நடந்ததாகக் கூறி டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மற்றும் முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஆகியோர் மீது ஊழல் தடுப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.