ரஷ்யாவில் உள்ள எரிவாயு வயல் பகுதியில் சூறாவளி சுழன்று வருவது போல் புழுதி சுழன்று வந்தது. டியூமன் பகுதியில் எரிவாயு வயல்கள் உள்ளன.
அங்கு வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சூறாவளி சுழன்று வருவதுபோல் புழுதி சுழன்று வந்தது.
தரையிலிருந்து வானளவிற்கு எழும்பிய புழுதி புயலின் காட்சி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. நல்வாய்ப்பாக இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.