நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகத் தெரிவித்தார்.
இந்த சாதிவாரி கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்தப்படும் எனத் தெரிவித்த அவர், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார்.
மேலும் மாநில அளவில் தனியாகச் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தத் தேவையில்லை என்று கூறிய அஸ்வினி வைஷ்ணவ், மாநிலங்கள் தனியாகச் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் குழப்பம் ஏற்படும் என்று தெரிவித்தார்.