மதுரை சித்திரை திருவிழாவின் 2 ஆம் நாளில் மீனாட்சியம்மன் அன்ன வாகனத்திலும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை பூத வாகனத்திலும் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா செவ்வாய் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மீனாட்சியம்மன் சன்னதிக்கு முன்னாள் உள்ள தங்கக் கொடி மரம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த நிலையில், மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் தங்கக்கொடி மரம் முன்பு எழுந்தருளினர்.
சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்ட நிலையில், காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள்ளாக மிதுன லக்கினத்தில் தங்கக் கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள்
கொடியினை ஏற்றி வைத்தனர்.
விழாவின் இரண்டாம் நாளில் மீனாட்சியம்மன் அன்ன வாகனத்திலும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை பூத வாகனத்திலும் எழுந்தருளி அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று மனமுருகி வழிபாடு நடத்தினர்.