மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் இயற்கை விவசாயிகள் மற்றும் நாட்டு மாடு வளர்ப்பு கூட்டமைப்பு சார்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
870 காளைகளும் 450 வீரர்களும் கலந்து கொண்ட போட்டியில் மதுரை வலையாங்குளம் பகுதியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அய்யனார் காளை முட்டியதில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.