சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தனியார் வங்கி ஊழியர்கள் தவணைத் தொகையை கேட்டு தரக்குறைவாக பேசியதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தூக்கியாம்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி வடிவேல் மனைவி, இரண்டு மகள் ஒரு மகனுடன் வசித்து வந்தார்.
இவர் வாழப்பாடியில் உள்ள தனியார் வங்கியில் தனது விவசாய நிலத்தை அடமானம் வைத்து 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இந்நிலையில் தவணை தொகையை செலுத்த 20 நாட்களே தாமதமான நிலையில் அவரது வீட்டிற்கு வந்த ஊழியர்கள் விவசாயி வடிவேலை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த வடிவேல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில்
சம்பந்தப்பட்ட தனியார் வங்கி ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் வரை விவசாயி வடிவேலின் உடலை வாங்கப் போவதில்லை என அவரது உறவினர்கள் வலியுறுத்தினர்.