அக்சய் குமாரின் ஹவுஸ்புல் 5 தொடரின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2010-ல் ஹவுஸ்புல் தொடரின் முதல்பாகம் வெளியானது. இந்த தொடரில் இதுவரை 4 பாகங்கள் வெளியாகி உள்ளன.
இந்த 4 பாகங்களிலும் அக்சய் குமார் மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ளனர். தற்போது ஹவுஸ்புல் தொடரின் 5-ம் பாகம் உருவாகி உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. வரும் ஜூன் மாதம் 6-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.