அனுஷ்கா நடித்துள்ள காதி படம் இரண்டு மாதத்திற்குள் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் அனுஷ்கா தனது 50-வது படமான காதி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் ஏப்ரல் மாதம் 18-ம்ந் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது.
ஒருசில காரணத்தால் அந்த தேதியில் படத்தினை வெளியிட முடியவில்லை. இந்த சூழலில், ஜூன் அல்லது ஜூலை மாத முதல் வாரத்திற்குள் படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.