சென்னை மதுரவாயல் அருகே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்துவரும் நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயலைச் சேர்ந்த 13 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
கடந்த 23ஆம் தேதி அறிவியல் ஆசிரியர் மோகன் என்பவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறிலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் மோகன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.
அப்போது, திடீரென 23 தூக்க மாத்திரைகளை உட்கொண்டு ஆசிரியர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உடனடியாக போலீசார் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.