அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் உலகளவில் 282 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
கடந்த 10ம் தேதி வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த இப்படம் நாளுக்கு நாள் வசூலிலும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், உலகளவில் இதுவரை சுமார் 282 கோடி ரூபாய் வசூலை நெருங்குகிறது. விரைவில் 300 கோடி ரூபாய் வசூலைச் செய்யும் எனப் படக்குழு கூறியுள்ளது.
















