பாதிக்குப் பாதி மாமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றுள்ளது.
சென்னை ரிப்பன் மாளிகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டமானது மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது.
எப்போதும் காலை 10 மணிக்குத் தொடங்கும் மாமன்ற கூட்டம் முன்னதாகவே அதாவது 9.56 மணிக்கே தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
மொத்தமாக உள்ள 200 கவுன்சிலர்களில் வெறும் 34 கவுன்சிலர்கள் மட்டுமே
மாமன்ற கூட்டத்தின் தொடங்கத்தில் உள்ளே இருந்தனர்.
ஏற்கனவே கூட்டம் தொடங்கும் போது அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் காலை 10 மணிக்கே அரங்கத்திற்குள் இருக்க வேண்டும் என மேயர் பிரியா உத்தரவிட்டும் பெரும்பாலான மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க வில்லை.
சரியாக 10.40 மணி அளவில் ஒரு சில கவுன்சிலர்கள் வர 84 மாமன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கத்திற்குள் இருந்தனர். இவ்வாறு பாதிக்குப் பாதி கவுன்சிலர்கள் இல்லாமல் மாமன்ற கூட்டம் நடைபெற்றது.