சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரே நாளில் 5 நீதிபதிகளுக்குப் பிரிவு உபசார விழா நடைபெற்றது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளான ஹேமலதா, எஸ்.எஸ்.சுந்தர், நக்கீரன், பவானி சுப்பராயன் மற்றும் சிவஞானம் ஆகியோர் மே மாதத்துடன் ஓய்வு பெறவுள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கு உயர்நீதிமன்ற வளாகத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் பிரிவு உபசார உரை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், தங்களது பணிக்காலம் குறித்த பசுமையான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். இதனிடையே 5 நீதிபதிகள் ஓய்வு பெறுவதன் மூலம், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆகக் குறையவுள்ளது.