திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கடலூர் பேருந்து நிலையத்திற்குப் பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்தின் சக்கரம், கழன்று விழுந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.
திட்டக்குடி அடுத்த அரங்கூர் பகுதியில் பயணித்த போதும் முன்பக்க சக்கரம் கழன்றதால், பேருந்து நிலை தடுமாறி நின்றது.
எனினும் பயணிகள் மற்றும் ஓட்டுநர் காயமின்றி தப்பினர். தமிழகத்தின் பல இடங்களிலும் இதுபோன்று அரசு பேருந்துகள் விபத்தில் சிக்குவதால் அதில் பயணிக்கவே அச்சமாக இருப்பதாகப் பயணிகள் தெரிவித்தனர்.