ரஷ்யாவில் நடைபெறவுள்ள அந்நாட்டின் வெற்றி நாள் விழா அணிவகுப்பில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜெர்மன் படைகள் மற்றும் சோவியத் யூனியனுக்கு இடையே நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனிடம் ஜெர்மன் படைகள் சரணடைந்தன.
இதனைக் கொண்டாடும் வகையில் ரஷ்யா சார்பில் வெற்றி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி மே 9 ஆம் தேதி 80 ஆம் ஆண்டு வெற்றி நாள் விழா கொண்டாடப்படவுள்ளது.
இந்த வெற்றி விழா அணிவகுப்பில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வெற்றி நாள் விழா அணிவகுப்பில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் என ரஷ்ய அதிபரின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ அறிவித்துள்ளார்.