உள் நாட்டு தேவையை முன்னிலைப்படுத்துவதற்காக அரிசி வகைகளுக்கு 20 சதவீத ஏற்றுமதி வரியை மத்திய அரசு விதித்துள்ளது.
அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதையும் உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட நடவடிக்கையாக மத்திய அரசு அரிசி வகைகளுக்கான வரியை விதித்துள்ளது. இதில் புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட சில வகையான அரிசி வகைகளுக்கு 20 சதவீத ஏற்றுமதி வரியை மத்திய அரசு விதித்துள்ளது.
இன்று முதல் அமலுக்கு வந்துள்ள வரிவிதிப்பு மக்களுக்கு தேவையான அளவு அரிசி இருப்பதும், விநியோகம் தொடர்ச்சியாக இருப்பதையும் உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் வரி விதிப்பின் மூலம் உள்நாட்டு சந்தையில் அரிசி விலை ஏற்றத்தை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.