கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.
சூளகிரி அடுத்த பெரிய சிகரள பள்ளி பகுதியில் இஸ்லாமியர்கள் பாஜகவில் இணையும் விழா நடைபெற்றது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டார்.
தொடர்ந்து விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், வேலூர் இப்ராஹிம் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.