மதுரை சித்திரைத் திருவிழாவின் 2 ஆம் நாளில் மீனாட்சியம்மன் அன்ன வாகனத்திலும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை பூத வாகனத்திலும் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா செவ்வாய்க் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழாவின் இரண்டாம் நாளில் மீனாட்சியம்மன் அன்ன வாகனத்திலும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை பூத வாகனத்திலும் எழுந்தருளி அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று மனமுருகி வழிபாடு நடத்தினர்.