மாஸ்கோ வெற்றி தின பேரணியில் பிரதமர் மோடிக்குப் பதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்கிறார்.
2ம் உலகப் போரின் போது ஜெர்மனியை ரஷ்யா வென்றது. இதன் 80ம் ஆண்டு வெற்றி தின அணிவகுப்பு ரஷ்யாவில் வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் சில பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பிரதமர் மோடி பங்கேற்கமாட்டார் எனவும் அவருக்குப் பதில் நிகழ்ச்சியில் பங்கேற்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோ செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.