ஆந்திர மாநிலம் திருப்பதியில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழையால் அங்குக் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
திருப்பதி மலையில் கோடை வெயில் சுட்டெரித்து வந்ததால் சுவாமி தரிசனம் மேற்கொள்ள வந்த பக்தர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இந்நிலையில், அங்கு திடீரென பெய்த கனமழையால் வெயிலின் தாக்கம் தணிந்ததால் பக்தர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.