தாம்பரம் அருகே உள்ள மதுரப்பாக்கம் கிராமத்தில் கடந்த ஓராண்டாகக் கிராம நிர்வாக அலுவலர் நியமிக்கப்படாததால் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தாம்பரம் வட்டத்திற்குட்பட்ட மாடம்பாக்கம் ஊராட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்பு 5 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக விஏஓ அலுவலகம் கட்டப்பட்டுத் திறக்கப்பட்டது.
மதுரப்பாக்கம் கிராமத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலர் நியமிக்கப்படாததால் விஏஓ அலுவலகம் வெறிச்சோடி காணப்படுவதாகப் பொதுமக்கள் கூறியுள்ளனர்.
அகரம்தென் கிராம விஏஓ வாரத்திற்கு ஒருமுறை மதுரப்பாக்கம் வருவதாகவும், அவசர தேவைக்கு அகரம்தென் கிராமத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், மதுரப்பாக்கம் விஏஓ அலுவலகத்திற்கு அதிகாரிகளை நியமித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.