வேலூரில் கோயில் வழியை மறைத்து கட்சி விளம்பர பேனர் வைத்துள்ள திமுக-வினரால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
காட்பாடி அருகேயுள்ள காங்கேய நல்லூர் கிராமத்தில் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. அங்குள்ள கிருபானந்தவாரியார் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் இந்த விநாயகர் கோயிலுக்கு வந்து செல்வது வாடிக்கை.
இந்நிலையில், அந்த கோயிலின் வழியை மறைத்து திமுக விளம்பர பேனரை வைத்த திமுக-வினர், அதன் அருகேயே தண்ணீர்ப் பந்தலும் அமைத்துள்ளனர்.
இதனால் கோயிலுக்குள் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளான பக்தர்கள், திமுக-வினர் இந்துக்களை அவமதிக்கும் செயல்களைத் தொடர்ந்து செய்து வருவதாகக் குற்றச்சாட்டினர்.