போலீசாரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தவெக தொண்டர்கள்!
Oct 17, 2026, 09:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

போலீசாரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தவெக தொண்டர்கள்!

Murugesan M by Murugesan M
May 1, 2025, 07:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரையில் இருந்து கொடைக்கானல் நோக்கி வேனில் சென்ற தவெக தலைவர் விஜயை, பின் தொடர்ந்து செல்ல முயன்ற தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தவெக தலைவர் விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கொடைக்கானலில் உள்ள தாண்டிக்குடியில் நடைபெறும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் இன்று மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

முன்னதாக விஜய்யின் வருகையை அறிந்து விமான நிலைய நுழைவு வாயிலில் குவிந்த தவெக தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது தங்களை விமான நிலையத்திற்குள் அனுமதிக்கக்கோரி தவெக தொண்டர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின் அங்கிருந்து வேன் மூலம் கொடைக்கானலுக்கு புறப்பட்ட தவெக தலைவர் விஜய்யை, அக்கட்சியின் தொண்டர்கள் சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்று உற்சாகமாக வரவேற்றனர். அப்போது அத்துமீறிய சில தொண்டர்களை போலீசார் எச்சரித்தனர்.

இதன் பின்னரும் விஜய் சென்ற வாகனத்தை ஏராளமான தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து செல்ல முயன்றனர்.

அவர்களை அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Tags: Maduraitvk vijayTvk volunteers surrounded the police and engaged in a heated argument
Share
Tweet
SendShare
Previous Post

வேலூர் : திடீரென கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழையால் மக்கள் குதூகலம்!

Next Post

வேலூர் : கோயில் வழியை மறைத்து கட்சி விளம்பர பேனர் வைத்த திமுகவினர்!

Related News

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies