நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கொலை செய்யும் நோக்கத்துடன் சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் தேனி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்தனர். இந்நிலையில், சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த சந்தோஷை தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.