ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 50-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது.
இதில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸை வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. ரியான் ரிக்கல்டன் 61 ரன்களும், ரோகித் சர்மா 53 ரன்களும் அடித்து விளாசினர்.
தொடர்ந்து 218 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது. கடந்த போட்டியில் 35 பந்துகளில் சதம் அடித்த வைபவ் சூர்யவன்ஷி, மும்பை அணி வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ரன்கள் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் பறிபோன நிலையில், 16 புள்ளி ஒரு ஓவரில் ராஜஸ்தான் அணி 117 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடிய மும்பை அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது….