திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவத்தின் முதல் நாள் விழா விமரிசையாக நடைபெற்றது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலில் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் வசந்த உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று முதல்நாள் திருவிழாவில் உண்ணாமுலை அம்பாளுடன் அண்ணாமலையார் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்து அருள்பாலித்தார்.
மூன்றாம் பிரகாரத்தில் உள்ள நான்கு கால் மண்டபத்தில் பொம்மை பூ கொட்டும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து மகிழ மரத்தை சுற்றி 10 முறை ஊர்வலமாக வந்த சுவாமியை பக்தர்கள் மனமுருக வழிபட்டனர்.