விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி அருகே மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
தூத்துக்குடியைச் சேர்ந்த பாஸ்கரன் தனது குடும்பத்துடன் ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது காரில் இருந்து கரும்புகை வெளியேறியதால் ஓட்டுநர் உக்கிரபாண்டி காரை சாலையோரம் நிறுத்திவிட்டு அனைவரையும் வெளியேற்றினார்.
சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்த நிலையில் காரின் முன்பகுதி முழுவதும் தீக்கிரையானது. தொடர்ந்து சம்பவ இடம் வந்த காரியாப்பட்டி தீயணைப்புத்துறையினர், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.