தூத்துக்குடியில் குடிநீர் பந்தலை அகற்றிய அதிகாரிகளுடன் தவெக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அண்ணா பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றி கழகம் சார்பில் குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உரிய அனுமதி பெறவில்லை எனக் கூறி மாநகராட்சி அதிகாரிகள் பந்தலை அகற்றியதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள், மீண்டும் அதேஇடத்தில் குடிநீர் பந்தலை அமைக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.