ஆந்திரா மாநிலம் நந்தியாலாவில் தீவிரவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைகளில் ஒட்டப்பட்ட பாகிஸ்தான் கொடிகளை அப்புறப்படுத்தி பத்திரமாக எடுத்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படும் பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில், பாகிஸ்தான் கொடிகளைச் சாலைகளில் ஒட்டி பொதுமக்கள் வினோத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் பாகிஸ்தான் கொடிகளைக் காலால் மிதித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நந்தியாலா என்.ஜி.ஓ காலனி பகுதியில் சாலைகளில் ஒட்டப்பட்ட பாகிஸ்தான் கொடிகளைச் சிலர் பத்திரமாக எடுத்துச் சென்றனர். அவர்களை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.