திருவள்ளூர் மாவட்டம் தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்காமல் கிராம மக்கள் புறக்கணித்தனர்.
பொன்னேரி நகராட்சியுடன் தடம்பெரும்பாக்கம் ஊராட்சியை இணைப்பதற்குக் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதன் காரணமாக, மே தின சிறப்புக் கிராம சபை கூட்டத்தைப் புறக்கணித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
கூட்டத்தில் பங்கேற்க அதிகாரிகள் அழைத்த போதும், அதனை ஏற்காமல் அவர்கள் புறக்கணித்தனர்.