நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக்கை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொஞ்சிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் முன்னணி நடிகரான அஜித் குமார் கலைத்துறையில் ஆற்றிய சேவையைப் பாராட்டி அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
அப்போது அவரது மகன் ஆத்விக்கை, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சினார்.
இந்த புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஷாலினி அஜித்குமார், பொக்கிஷமான தருணம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.