2025-ம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழாவின் ஜூரி உறுப்பினராக பாயல் கபாடியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகின் பல்வேறு பகுதியில் இருந்து ஜூரிகள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். பிரெஞ்சு மற்றும் ஆங்கில நடிகை ஜூலியட் பினோஜ் தலைமையில், அமெரிக்க நடிகை ஹாலே பெரி, நடிகர் ஜெர்மி ஸ்ட்ராங்க், தென் கொரிய இயக்குநர் ஹாங் சன்சூ உள்ளிட்டோர்களுடன் பாயல் கபாடியாவும் ஜுரியாக இடம்பெற்றுள்ளார்.
இவர் இயக்கிய ஆல் வி இமேஜின் அஸ் லைட் 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் விருதைப் பெற்று சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.