உத்தம்பாளையம் அருகே இடப்பிரச்சனை காரணமாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பகுதியில் சுந்தர் என்பவரும் அவரது வீட்டின் எதிர் பகுதியில் ராஜேந்தின் என்பவரும் வசித்து வருகின்றனர்.
இருவருக்கும் கடந்த ஓராண்டுகளாக இடப்பிரச்சனை தொடர்பாகத் தகராறு இருந்துள்ளது. ராணுவத்தில் பணியாற்றி வந்த ராஜேந்திரனின் மகன் பார்த்திபன் விடுமுறைக்காக வந்தபோது எதிர் வீட்டினருடன் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எதிர்வீட்டுக் குடும்பத்தினரைப் பார்த்திபன் அரிவாளால் தாக்கியுள்ளார்.
இதில், எதிர்வீட்டில் வசித்து வந்த முத்துமாயன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சுந்தர் மற்றும் அவரது மனைவி சுதா படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சென்ற போலீசார் படுகாயமடைந்த இருவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பார்த்திபன் மற்றும் அவரது பெற்றோரைக் கைது செய்தனர்.