மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் சபலென்கா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, உக்ரைன் வீராங்கனை மார்டா கோஸ்டியூக் உடன் மோதினார்.
இதில் சபலென்கா முதல் செட்டை 7-6, 7-4 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் உக்ரைன் வீராங்கனை கடும் சவால் அளித்த நிலையில், சபலென்கா 2வது செட்டை 7-6, 9-7 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் சபலென்கா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவுடன் மோதுகிறார்.