மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் விக்னேஷ் புத்தூர் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
அவர் விலகியதால் மும்பை இந்தியன்ஸ் அணிக்குப் பாதிப்பு எனப் பலரும் கூறிவருகின்றனர். இதனிடையே விக்னேஷ் புத்தூருக்குப் பதிலாக ரகு சர்மாவை மும்பை அணி ஒப்பந்தம் செய்துள்ளது.