பஞ்சாப் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச தவறியதால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இதில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்று வாய்ப்பிலிருந்து வெளியேறியுள்ளது.
இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இதனால் அந்த அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயருக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.