உய்யக்கொண்டான் வாய்க்காலிலிருந்து பிரிந்து செல்லக்கூடிய கால்வாயில் கழிவுநீர் மற்றும் குப்பைகள் கலந்து சாக்கடை நீராக மாறியதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் கால்வாய் என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்க்கால் ஆகும். இந்த வாய்க்காலில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கிளை கால்வாய்கள் பிரிந்து விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உறையூர் குமரன் நகர் பகுதி வழியாகச் செல்லக்கூடிய கத்திரிக்காய் வாய்க்கால் முழுவதும் கழிவுநீர் மற்றும் குப்பைகள் கலந்து சாக்கடை நீராக மாறி உள்ளது.
இதனால், நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கால்வாயை உடனடியாக தூர்வாரி சீரமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.