திருப்பத்தூர் அருகே 2 பேரைத் தாக்கி காயப்படுத்திய கரடியை நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் பிடித்தனர்.
நாட்றம்பள்ளி அடுத்த செத்தமலை பகுதியில் இருந்து தாய்க் கரடி ஒன்று தனது 2 குட்டிகளுடன் மானப்பள்ளி விவசாய நிலத்திற்குள் புகுந்தது.
2 குட்டிகளும் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்ற நிலையில், தாய்க் கரடி மட்டும் விவசாய நிலத்திற்குள் வலம் வந்தது.
மணிமேகலை, ராஜி ஆகிய இருவரைக் கரடி கடித்துக் காயப்படுத்திய நிலையில், இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் வலை விரித்து கரடியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் வெகு நேரமாக வலையில் சிக்காமல் போக்கு காட்டிய கரடி, பின்னர் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.