நீலகிரி மாவட்டம், உதகையில் நடைபெற்ற மாணவ, மாணவிகளின் குதிரை சாகச நிகழ்ச்சி காண்போரை மெய்சிலிர்க்கச் செய்தது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் சர்வதேச பள்ளியின் 167-வது ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் ஈக்வஸ்டிரின் என்றழைக்கப்படும் குதிரை சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் குதிரை மீது ஏறி பல்வேறு சாகசங்களைச் செய்து காட்டி பார்வையாளர்களை அசத்தினர்.