சட்டமன்றத்தால் எப்படி சட்டத்தீர்ப்புகளை வழங்க முடியாதோ, அதுபோல நீதித்துறையும் அதன் எல்லைக்குள் இருக்க வேண்டும் எனக் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் படேலின் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஜெகதீப் தன்கர், ஒவ்வொரு நிர்வாகமும் அவர்களுக்குண்டான களங்களுக்குள் செயல்படும்போதே மரியாதை இருக்கும் என்றார்.
அண்மையில் மசோதாக்கள் மீது முடிவெடுக்கக் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் 3 மாதங்கள் கெடு விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.