பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த ராஜஸ்தானைச் சேர்ந்த நபரை உளவுப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
பஹெல்காம் தீவிரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கிய நிலையில், நாடு முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிரான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் வசிக்கும் பதான் கான் என்பவர், பாகிஸ்தானுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற பதான் கான் அங்குள்ள புலனாய்வு அமைப்பு அதிகாரிகளுக்கு, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணத்திற்காக அவர் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு உளவு பார்த்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.