மேட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு இத்தாலி வீரர் லாரென்சோ முசெட்டி முன்னேறியுள்ளார்.
ஸ்பெயினில் நடைபெற்று வரும் இந்த தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி போட்டியில் கனடா வீரர் கேப்ரியல் டியல்லோவுடன் மோதிய, இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி 6-க்கு 4, 6-க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதி போட்டியில் முசெட்டி பிரட்டினின் ஜாக் டிராபருடன் மோதவுள்ளார்.