நாடு திரும்பிய பாகிஸ்தானியர்களை உள்ளே அனுமதிக்க வேண்டி அட்டாரி – வாகா எல்லையை பாகிஸ்தான் மீண்டும் திறந்தது.
பஹல்காமில் கடந்த 22-ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானியர்களுக்கான குறுகிய கால விசாக்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து வெளியேறிய தனது குடிமக்களை உள்ளே அனுமதிப்பதற்காக, அட்டாரி – வாகா எல்லையை பாகிஸ்தான் மீண்டும் திறந்தது.
அதன் வழியாக ஏராளமான பாகிஸ்தானியர்கள் தாயகம் திரும்பிய நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 911 பாகிஸ்தானியர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறி இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பாகிஸ்தான் எல்லை முற்றிலுமாக மூடப்பட்டது.