இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்தை 3 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து கேரள கிரிக்கெட் சங்கம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த், கேரள கிரிக்கெட் வாரியம் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பி வந்தார்.
சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இடம்பெறாதது குறித்தும் அவர் விமர்சனத்தை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஸ்ரீசாந்தை 3 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து கேரள கிரிக்கெட் சங்கம் உத்தரவிட்டுள்ளது. எர்ணாகுளத்தில் நடைபெற்ற சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.