தமிழகத்தில் ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 17 கோடியே 25 லட்சம் ரூபாய் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
‘ரெட்ரோ’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவலைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி டிக்கெட் விலையில் உயர்வு இல்லாமலேயே இத்திரைப்படம் 17 கோடியே 25 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவே நடிகர் சூர்யாவின் படங்களில் அதிக வருமானம் ஈட்டிய ஓப்பனிங் டே வசூலாகப் பார்க்கப்படுகிறது.